அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!
அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைப் பற்றி...

அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
தரமற்ற போலி நூல்கள் விற்பனை செய்த வழக்கில் அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்காக நூல்கள் தேர்வு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டதில், தகுதியற்ற போலி புத்தகங்கள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள், போலி நூலாசிரியர்கள் மற்றும் போலியான பதிப்பகங்கள் வாயிலாகப் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.
பெரியார் அறிவுலக நூலகத்திற்கு வாங்கப்பட்ட நூல்களில், அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் நூல்கள் தரமற்றதாகவும், ஆசிரியர் இன்றி செய்யறிவு மூலம் எழுதப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் உரிமையாளர் ஆர். மோகனை கடந்த நவ. 16 ஆம் தேதி ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் உள்பட நூலகங்களில் இருந்து சுமார் 70,000-க்கும் மேற்பட்ட போலி புத்தகங்கள் அகற்றப்பட்டன.
நூல் கொள்முதல் விவகாரத்தில் நூலகத் துறை அலுவலர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்து பொது நூலக இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், கோயம்புத்தூர் பெரியார் அறிவுலக நூலக அதிகாரிகள் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மோகனின் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய அதிகாரிகள், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை, அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர். அப்போது, மோகனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரை உடனே சிறையில் அடைத்ததால் விசாரணை நடத்த போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Mohan, the owner of Agalvilakku Publications, was produced before a special court in connection with a case involving the sale of substandard, counterfeit books.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

