
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்குத் தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்குத் தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது குறித்து...

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த ஏற்கெனவே தடை விதித்து, ஜூலை 10 ஆம் தேதியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், வெங்கடாஜலபதி தாக்கல் செய்திருந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது.
Summary
Verdict reserved in the case seeking a stay on by-elections in 5 constituencies, including Trichy East
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





