நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம்

ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்திற்கு புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரியது பற்றி..

ஸ்மார்ட் மீட்டர் - பிரதிப் படம்

Published On :

தமிழகத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட குறைந்த மின் அழுத்தப் பிரிவு நுகர்வோருக்கு சுமார் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் புதிய ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.

மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுதல், செயல்படுத்துதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

சென்னையில் 56.85 லட்சம்: தமிழகம் முழுவதும் சுமார் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ள நிலையில், சென்னை மின் பகிர்மானப் பகுதியில் மட்டும் சுமார் 56.85 லட்சம் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக திட்டம் பல தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

முன்கட்டண முறையில் மின்சாரம்: ஸ்மார்ட் மீட்டர்களில் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி மின்சாரம் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கைப்பேசி இணைப்புக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயன்படுத்துவதைப் போன்ற இந்த முறையில், மின் பயன்பாட்டுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்த முடியும்.

மின்மாற்றிகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்: நுகர்வோருக்கான மீட்டர்களுடன், மின் விநியோக மின்மாற்றிகளில் ஏற்படும் மின் இழப்பைக் கண்காணிக்கவும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.

தியாகராயநகர் பகுதியைத் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மின் விநியோக மின்மாற்றிகளுக்கான ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணிக்கும் தனியாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நவ.26-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். இதற்கான முன்வைப்புத் தொகை ரூ.13 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.