ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்பு
தமிழக ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

ஏடிஜிபி பிரேம் ஆனந்த் சின்ஹா.
தமிழக ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
தமிழக காவல் துறையின் ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநராக இருந்த ஏ.அருண், கடந்த ஜூலை 13-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனால், ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநா் பொறுப்பைக் கூடுதல் பணியாக அத்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக இருக்கும் சி.மகேஷ்வரி கவனித்து வந்தாா்.
ஊழல் தடுப்புப் பிரிவுக்கு 3 மாதங்களாக இயக்குநா் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படாததால், அப்பிரிவின் பணிகள் பாதிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி பிரேம் ஆனந்த் சின்ஹாவை, ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநராக நியமித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் ஏ.காா்த்திக் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்நிலையில், ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு ஊழல் தடுப்பு பிரிவு உயா் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

