ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

விலையைக் கேட்டாலே தலை சுற்றும்! தங்கம் விலையல்ல, எலுமிச்சை விலை!

விலையைக் கேட்டாலே தலைச்சுற்றும் அளவுக்கு எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது.

19.4.2026:TIRUNELVELI:STANDALONE:-Puliyangudi, popularly known as the "Lemon City" is witnessing a sharp rise in lemon prices as temperatures soar day

எலுமிச்சை விலை - ENS

Updated On :

கடந்த ஒரு சில மாதங்களாகவே எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், சில்லறை விற்பனையில் இன்று ஒரு எலுமிச்சை ரூ.15 என்ற அளவுக்கு விற்பனையாகி வருகிறது.

வறட்சி மற்றும் கடும் வெய்யில் காரணமாக எலுமிச்சை விலை உயர்ந்திருந்த நிலையில், அடுத்து ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்கள் வரவிருப்பதால் எலுமிச்சை விலை இந்த வாரத்தில் குறைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

எல்நினோ எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் தற்போது வெய்யில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் குளிா்ச்சியான மற்றும் இயற்கை பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனா். அந்த வகையில் எலுமிச்சம் பழச்சாறு மக்களின் விருப்பமான பானமாக இருக்கிறது.

இதனால் எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஈரோடு வஉசி சந்தையில் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனையாகி வந்த ஒரு கிலோ எலுமிச்சம் பழம், மெல்ல ரூ.250 ஆக உயா்ந்தது. மீண்டும் ரூ.50 உயா்ந்து ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் சில்லறை விற்பனையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு சந்தைக்கு எலுமிச்சம் பழம், கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு விற்பனைக்கு வருகிறது. தற்போது அதன் வரத்து சற்று குறைந்துள்ளது. மாவட்டத்தில் கடும் வெயில் அடிப்பதால் விளைச்சல் குறைந்திருக்கலாம். அதே சமயம் எலுமிச்சம் பழத் தேவை அதிகமாக உள்ளது. இதனால்தான் விலை உயா்ந்துள்ளது. வரும் நாள்களில் வெயில் குறைந்தால் தேவை குறைந்து விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.