கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

திமுகவினர் மீது தவெகவினர் தாக்குதலா? முன்னாள் அமைச்சர் கண்டனம்

திமுகவினரை தவெகவினர் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்தது குறித்து...

திமுகவினரை தவெகவினர் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கண்டனம்

Updated On :

திமுகவினரை தவெகவினர் தாக்கியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.

திமுகவினரை தவெகவினர் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கண்டன தெரிவித்து கூறியிருப்பதாவது, தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து வியாழக்கிழமை (அக். 15) நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முடிந்து, திமுகவினர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பேசின் பிரிட்ஜ் அருகே நடைபெற்ற ஆளும் கட்சியின் அராஜக சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குரியவை.

முதல்வர் விஜய் செல்லும் வழியில், அவ்வழியாக ஆர்ப்பாட்டம் முடிந்து திமுகவினர் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், தவெக-வினர் அவர்களை மறித்து அவதூறாகப் பேசி, அவர்கள் வைத்திருந்த கொடிகளைப் பறித்துத் தாக்கினர். இதற்குப் பதிலாக "திமுக வாழ்க! தலைவர் வாழ்க!" என திமுகவினர் முழக்கமிட்டனர்.

இந்த நிலையில், முதல்வரின் வாகன அணிவகுப்பில் சென்ற அமைச்சர் ஒருவரின் அறிவுறுத்தலின்பேரில், சென்னை கிழக்கு மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணியின் துணை அமைப்பாளர் மகுடனை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கமிட்ட செந்திலை ஆளும் கட்சியை சார்ந்த தவெகவினர் -கண்மூடித்தனமாக காட்டுமிராண்டி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, செந்திலை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, அந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தோள்பட்டை எலும்பு முறிவுடன் அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் அழைத்துச் சென்ற காவல்துறை வாகனம் வாகனத் தகுதி சான்றிதழ்கூட (FC) செய்யாமல் இருந்திருக்கிறது.

தகவலறிந்ததும், நானும் கழக நிர்வாகிகளும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களைச் சந்தித்து, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினோம். இருப்பினும், ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள், காவல்துறையினரின் அழுத்தம் காரணமாக, அவர் முழுமையான சிகிச்சை பெறுவதற்கு முன்பே வியாழக்கிழமை மாலையே வீட்டுக்கு அனுப்பப்பட்டார். தற்போது, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்திற்குச் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையின் இந்நடவடிக்கை குறித்துத் தகுந்த விளக்கமும், முறையான விசாரணையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

இதுபோன்ற அடக்குமுறைகளுக்கும், அராஜகங்களுக்கும், பொய் வழக்குகளுக்கும் அஞ்சிப் பின்வாங்கும் இயக்கமல்ல திராவிட முன்னேற்றக் கழகம் என்று தெரிவித்துள்ளார்.

Summary

Former Minister Sekar Babu condemns alleged attack on DMK members by TVK members

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.