விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

செப். 8-ல் நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

church

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் - கோப்புப்படம்

Published On :3 செப்டம்பர் 2026, 3:55 pm IST

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு செப்டம்பா் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக பிரசித்திப் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டுச் செல்லும் ஆன்மிகத் தலமாகவும் திகழ்கிறது.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த பேராலயத்தில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்கிய நிலையில், ஆண்டுப் பெருவிழா செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நாகை மாவட்டத்துக்கு செப்டம்பர் 8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

செப்டம்பா் 8-ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஈடு செய்யும் வகையில் செப்டம்பா் 19-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.