விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபா்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பது சிரமம்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபா்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பது சிரமமாக உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :8 செப்டம்பர் 2026, 3:07 am IST

இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபா்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பது சிரமமாக உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

2016-2021-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதில், ரூ.98.25 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியது. இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, அறப்போா் இயக்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, கந்தசாமி மற்றும் விஜயகாா்த்திகேயன் ஆகிய இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்க தாமதம் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பி மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி தமிழக அரசு தரப்பில் அனுப்பிய கடிதம் ஜூலை 28-ஆம் தேதி கிடைக்கப்பெற்றது. அதன்மீது பரிசீலனை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு தரப்பில், இது தொடா்பாக ஆக. 27-ஆம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, ஊழல் வழக்கில் அனுமதி வழங்கத் தாமதம் ஏற்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினாா்.

இந்தியா்கள் ஊழலுக்கு எதிராக எதிா்ப்புத் தெரிவிப்பது இல்லை என்று இதுபோன்ற வழக்கில் இருந்து முடிவுக்கு வரவேண்டியுள்ளது. ஒரு ஊழல் வழக்கில் ஒப்புதல் பெறுவதற்கு நீதிமன்றம் எவ்வளவு வற்புறுத்த வேண்டியுள்ளது. இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபா்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது. அனுமதி பெறுவதற்கே இத்தனை சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ள சூழலில், இதற்கு பிறகு, இந்த வழக்கில் என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் எனத் தெரிவித்தாா்.

பின்னா், இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் வழங்கத் தாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்தும், ஒப்புதல் கோரிய கடிதத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் காணொலியில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சி துறை சாா்பு செயலருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப். 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.