FOLLOW US

ON GOOGLE DISCOVER

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!

தீபாவளி ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது குறித்து...

train

ரயில் - பிரதிப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 1:04 pm IST

தீபாவளிக்கான ரயில் பயண முன்பதிவு இன்று (செப். 7) தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவடைந்ததால், பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.

ரயில் டிக்கெட் முன்பதிவு வழக்கமாக 60 நாள்களுக்கு முன்பு தொடங்கும். அந்த வகையில் தீபாவளிக்கு ரயில்களில் பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் வரும் நவ. 8-ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, தீபாவளிக்கு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் அதிக அளவில் ரயில்களில் முன்பதிவு செய்ய ஆர்வமாக இருந்தனர்.

நவ. 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) பயணிப்பதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செப். 6 (நேற்று) காலை தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்தது.

அதேபோல நவ. 6 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செப். 7, திங்கள்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு முயற்சித்த நிலையில் முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

ஏசி டிக்கெட்டுகளும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு பயணிப்பவர்கள் எண்ணிக்கை, முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதால் ரயில் டிக்கெட் கிடைக்காமல் பலரும் அவதிப்படுகின்றனர்.

தீபாவளிக்கு முந்தைய நாள் (நவ. 7, சனிக்கிழமை) பயணிப்பதற்கு நாளை (செப். 8, செவ்வாய்) காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

Many were disappointed as train reservations for Diwali were fully booked within minutes of opening today (Sept. 7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.