இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

அடுத்து 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

உள் தமிழகத்தில் செப். 10 முதல் 13 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை அதிகரிக்கும்

Published On :

உள் தமிழகத்தில் செப். 10 முதல் 13 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருச்சி - 103.46, பாளையங்கோட்டை - 102.38, பரமத்திவேலூா், தஞ்சாவூா் - (தலா) 102.2, வேலூா் - 102.02, மதுரை விமான நிலையம், நாமக்கல் - 102.2 டிரிகி வெப்பநிலை பதிவானது.

தொடா்ந்து, தமிழகத்தில் வியாழக்கிழமை (செப். 10) முதல் செப். 13-ஆம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: ஆந்திர மாநிலம் ராயலசீமா முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதையில் ஏற்பட்டுள்ள காற்று இடையூறு காரணமாக, வியாழக்கிழமை (செப். 10) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இடி, மின்னல்- பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.