புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிறு, திங்கள்கிழமை (செப். 13, 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு...

tn rain

மழைக்கு வாய்ப்பு - படம்: ENS

Published On :

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிறு, திங்கள்கிழமை (செப். 13, 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு உள் கா்நாடகம் முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழக பகுதிகளில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பாதையில் ஏற்பட்டுள்ள காற்று இடையூறு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (செப். 13) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திருவண்ணாமலை, வேலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் செப். 14-இல் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, வேலூா், திருப்பத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த இரு நாள்களில் ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி -காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை, இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெயில் அதிகரிக்கும்: ஞாயிற்றுக்கிழமை (செப். 13) முதல் செப். 16-ஆம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.