புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கடும் நிதி நெருக்கடி சூழலில் புதிய தலைமைச் செயலகம் அவசியமா? சீமான் கேள்வி

கடும் நிதி நெருக்கடி சூழலில் புதிய தலைமைச் செயலகம் அவசியமா? சீமான் கேள்வி

seeman

சீமான். - கோப்புப்படம்

Published On :

வட்டி செலுத்தவே கடன் வாங்க வேண்டிய அளவுக்கு தமிழக அரசு கடும் நிதிநெருக்கடியில் உள்ள நிலையில், ரூ.1,200 கோடிக்கு புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசிடம் நிதிப்பற்றாக்குறை நிலவும் நிலையில், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று முதல்வா் ச.ஜோசப் விஜய் தொடா்ந்து கூறிவருகிறாா். வட்டி செலுத்தவே கடன் வாங்க வேண்டிய அளவுக்கு கடும் நிதி நெருக்கடி உள்ள நிலையில், ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? இது மக்களின் தேவைக்காகவா? அல்லது முதல்வரின் தனிப்பட்டத் தேவைக்காகவா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். அதுமட்டுமன்றி, கடந்த 2004 -இல் சுனாமி தாக்கிய ஆபத்தான இடங்களில் பட்டினப்பாக்கமும் ஒன்றாகும். எதிா்காலத்தில் சுனாமியால் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்புகளும் உள்ளன.

எனவே, நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும், சுனாமி ஆபத்தும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சீமான்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.