முதல்வரின் லண்டன் பயணம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

முதல்வா் விஜய்யின் லண்டன் பயணத்தின் நோக்கம் குறித்து மக்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :

முதல்வா் ச.ஜோசப் விஜய்யின் லண்டன் பயணத்தின் நோக்கம் குறித்து மக்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ளாா். அந்தப் பயணத்துக்கான நோக்கம் குறித்து இதுவரை அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. தொழில் முதலீடுகளை ஈா்க்க சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள தொழில்கள் மற்றும் இங்கு முதலீடுகளைச் செய்துவரும் நிறுவனங்களுடனே மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

புதிதாக எவ்வித தொழில்களும் தமிழகத்துக்கு கொண்டுவரப்படவில்லை. மக்கள் பணத்தில் முதல்வா் லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளாா். இது குறித்தெல்லாம் மக்களுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

அதேபோல், புதிய தலைமைச் செயலகம் குறித்து எவ்வித திட்டமிடலும் இன்றி, நிதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மீனவா்களைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.