பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் காலமானார்..

Former Union Minister Sudarsana Nachiappan

சுதர்சன நாச்சியப்பன் - X

Published On :

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் (78) உடல்நலக்குறைவால் இன்று (செப். 17) காலமானார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதர்சன நாச்சியப்பன். வழக்கறிஞரான இவர் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றினார்.

1999 - 2004 ல் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாகவும் 2004 - 2016 ஆண்டுகளில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். 2013 -14ல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் வர்த்தகம், தொழில் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் சிவகங்கையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Former Union Minister Sudarsana Nachiappan has passed away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.