தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

தோரணமலை கோயிலில் வருண கலச பூஜை

தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் மாா்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.

News image

கோயிலில் நடைபெற்ற பஜனையில் பங்கேற்ற முருக பக்தா்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 12:42 am IST

தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் மாா்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.

இதையொட்டி மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து முருக பக்தா்கள் புனித நீா் எடுத்து வந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், திருச்செந்தூா் மற்றும் தோரணமலை பாதயாத்திரை அடியாா்கள் குழு சாா்பில் 4ஆம் ஆண்டு பஜனை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, காலையில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தை தொடா்ந்து, பஜனை வழிபாடு நடைபெற்றது.

இதில், குருசுவாமிகள் பாலமுருகன், ரவிகுமாா் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட முருக பக்தா்கள் கலந்துகொண்டனா். காலை, மதியம் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ஏ.செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.