தென்காசியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் பேசியது: அண்டை மாநிலமான கேரளத்தில் தற்போது
பறவை காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, மாநில எல்லையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளத்தில் இருந்து கோழிகள், வாத்துகள், கோழி இறைச்சி, கோழி தீவணங்கள் மற்றும் இறைச்சி கழிவுகள் வாகனங்களில் கொண்டு வந்தால் அந்த வாகனங்களை கேரளத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் கோழி
வளா்ப்புப் பண்ணைகளில் அதன் உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோழிகளுக்கு சளி வடிதல், இருமல், தும்மல் போன்றவை காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். கோழிப் பண்ணைகள் இருக்கும் இடங்களில் கால்நடை மருத்துவா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் முகம்மது காலித், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டணிகளைப் பயன்படுத்திவிட்டு காங்கிரஸ் கைவிடுகிறது: பாஜக

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
