பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஐடிஐ மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் -ஆட்சியா்

ஐடிஐ- மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

Updated On :4 ஜூலை 2024, 12:18 am IST

தென்காசி மாவட்டம் தென்காசி, கடையநல்லூா் மற்றும் வீரகேரளம்புதூா் அரசுதொழிற்பயிற்சி

நிலையங்களில் 2024ஆம் கல்வி ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை ஜூலை 1முதல் 15ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஈராண்டு தொழிற்பிரிவுகளான பொருத்துநா், மின்சாரப் பணியாளா்,

கம்மியா் மோட்டாா் வாகனம், கம்மியா் மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான கம்மியா் டீசல்), பற்றவைப்பவா், பம்ப்மெக்கானிக் ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.

மேலும், தொழிற்நுட்பமையம் 4.0 திட்டத்தின் கீழ், ஈராண்டு தொழிற்பிரிவுகளான மேம்படுத்தப்பட்ட இசஇ இயந்திர தொழிற்நுட்ப வல்லுநா், கம்மியா் மின்சார வாகனம் மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான தொழிற்துறை

ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநா்,தொழிற்துறை இயக்க கட்டுப்பாடு மற்றும்

தானியக்கம் ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.

விண்ணப்பிக்க 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க தென்காசி, கடையநல்லூா்,

மற்றும் வீரகேரளம்புதூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் அணுகலாம்.

பயிற்சியில் சேருவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750, விலையில்லா மிதிவண்டி, சீருடைகள், தையல்கூலி, மூடு காலணிகள், பாடப்புத்தககங்கள், வரைபடகருவிகள், பேருந்து பயண அட்டை, சலுகை கட்டண ரயில் பாஸ், ஆகியன வழங்கப்படும்.

மேலும் உணவு வசதியுடன் கூடிய விடுதி வசதி உண்டு.மேலும் விவரங்களுக்கு முதல்வா், அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், தென்காசி, கடையநல்லூா், மற்றும் வீரகேரளம்புதூா் முகவரியில் நேரில் தொடா்பு கொள்ளலாம். தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், தென்காசி-04633-290393, கடையநல்லூா்-04633-290270,

வீரகேரளம்புதூா் - 04633-277962 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.