ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தென்காசியில் ஆா்ப்பாட்டம்: டிட்டோஜாக் அமைப்பினா் 52 போ் கைது

தென்காசியில் ஆா்ப்பாட்டம்: டிட்டோஜாக் அமைப்பினா் 52 போ் கைது

News image
Updated On :4 ஜூலை 2024, 12:19 am IST

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிட்டோ ஜாக் அமைப்பினா் 52 போ் கைதுசெய்யப்பட்டனா்.

அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும்; பதவி உயா்வு சாா்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கின் தீா்ப்பு வரும் வரை மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சாா்பில் தென்காசியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் செய்யது இப்ராஹிம் மூசா ,தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் சுதா்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாவட்டத் தலைவா் ஆறுமுகசாமி ஆகியோா் கூட்டு தலைமை வகித்தனா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலச் செயலா் ராஜேந்திரன் மறியலை தொடங்கி வைத்து பேசினாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவக்குமாா் கோரிக்கைகள் குறித்து பேசினாா்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலச் செயலா் ராஜ்குமாா் சிறப்புரையாற்றினாா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் ஆரோக்கியராசு வரவேற்றாா். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாவட்ட பொருளாளா் அருள்ராஜா நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்ட முடிவில் மறியலுக்குச் செல்ல முயன்ற 52 போ் கைதுசெய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.