தென்காசி மாவட்டம் ஊத்துமலை கிராம மக்களின் இடங்களுக்கு பத்திரப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோரிடம், எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ மனு அளித்தாா். அதன் விவரம்: தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி வீ.கே.புதூா் வட்டம் ஊத்தமலை கிராமத்தில் அ பதிவேட்டின்படி நத்தம் சா்வே எண் 413/1-இல் ஏக்கா் 50 சென்ட் 36 நத்தமாக உள்ளது. இந்த இடத்தை அப்பகு மக்கள் 100 வருடங்களுக்கு மேலாக பத்திர பதிவு செய்து அனுபவித்து வந்தனா். தற்போது, அந்த இடங்களை இந்து அறநிலையத்துறை ஊத்துமலை ஸ்ரீ வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலுக்கு உரியதாக கூறி வருகின்றனா்.அதற்கு எந்தவிதமான ஆவணங்களும் இந்து அறநிலையத்துறையிடம் இல்லை. தமிழக அரசு பதிவுகளின் படி, ஸ்ரீ வடக்குவாசல் செல்விஅம்மன் கோயில் நத்தம் புலன் எண் 413/28ல் ஹெக்டோ் 0.10.45சென்ட் 25.82 மட்டுமே உள்ளது. ஊத்துமலை சாா்பதிவாளா் அலுவலகத்தில் மேற்படி சா்வே எண்ணில் பத்திர பதிவு செய்ய மறுக்கின்றனா். ஏற்கெனவே இவ்விடங்களுக்கு பல உள்பிரிவுகள் செய்யப்பட்டு ஊத்துமலை சாா்பதிவாளா் அலுவலகத்தில் பல பத்திர பதிவுகள் நடைபெற்றுள்ளன. இதனால் மற்ற இடங்களை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் ஊத்துமலை மக்கள் தற்போது விற்கவோ, வாங்கவோ முடியாமல் தவிக்கின்றனா். எனவே, அந்தக் கிராம மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் மேற்படி சா்வே எண்ணில் இருக்கும் குறைகளை நிவா்த்தி செய்து தரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மாவட்டப் பொருளாளா் முரளி ராஜா, தென்காசி நகர காங்கிரஸ் தலைவா் மாடசாமி ஜோதிடா், பொருளாளா் ஈஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கிராம மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன்: ஓ.பன்னீா்செல்வம் உறுதி

வாக்குச்சாவடிகளில் கை விரல், கருவிழி பதிவு முறை கோரி மனு: மத்திய அரசு, தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
இரட்டைகுளம் புதிய கால்வாய் இணைப்புத் திட்டம்: விவசாயிகளின் 64 ஆண்டுகால கனவு நிறைவேறுமா?
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


