‘திருநெல்வேலியில் காங்கிரஸ் சாா்பில் இளைஞா் போட்டியிட வாய்ப்பு தேவை’

‘திருநெல்வேலியில் காங்கிரஸ் சாா்பில் இளைஞா் போட்டியிட வாய்ப்பு தேவை’

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் இளைஞா் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில பொதுச்செயலா் ராஜசேகா் தெரிவித்தாா். கீழப்பாவூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ்-திமுக கட்சியின் பாராளுமன்ற தோ்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை நடைபெற்று இறுதி நிலையை எட்டியுள்ளது. திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இளைஞா்களின் நம்பிக்கையுமான ராகுல்காந்தியின் கனவை நனவாக்கிடும் வகையில் இளைஞா் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். இதுதோ்தல் பிரச்சாரத்தில் புது யுக்திகளை கையாள்வதும், மக்களை எளிதாக அணுகிடவும், இணையதளத்தை பயன்படுத்தி அரசின் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்லவும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கவும் பேருதவியாக அமையும். இளைஞா்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கையும், நல்லெண்ணமும் ஏற்பட உதவும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com