முப்புலியூரில் பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு

முப்புலியூரில் பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் குணராமநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட முப்புலியூரில் பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்து பகுதிநேர நியாயவிலை கடையை திறந்து வைத்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் காவேரி சீனித்துரை, ஒன்றிய செயலா் சீனித்துரை, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜேகே.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com