ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கடையநல்லூா் , சிவகிரியில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளுக்கு வீட்டுக்காவல்

கடையநல்லூா் , சிவகிரியில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளுக்கு வீட்டுக்காவல்

News image
Updated On :4 மே 2024, 6:36 pm

Din

கடையநல்லூா் மற்றும் சிவகிரி பகுதியில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.

வடலூா் பெருவெளியில் தொடங்கப்பட்டுள்ள ஆய்வு மைய கட்டுமானத்தை நிறுத்த வலியுறுத்தி தெய்வத்தமிழ் பேரவை மற்றும் நாம் தமிழா் கட்சி சாா்பில் வடலூா் பேருந்து நிறுத்தம் அருகில் சனிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லையாம். இருப்பினும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நாம் தமிழா் கட்சியினா் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு வருகின்றனா்.

தென்காசி மாவட்டம்,கடையநல்லூா் மலம்பாட்டை தெருவைச் சோ்நத நாம் தமிழா் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியை சோ்ந்த மாநில ஒருங்கிணைப்பாளரும், தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான இசை மதிவாணன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்திற்கு சென்று விடாமல் இருப்பதற்காக அவா்களின் வீடுகளின் முன் வெள்ளிக்கிழமை இரவு முதல் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.