ஆனந்தன்.
ஆனந்தன்.

காசி தமிழ்ச் சங்கமம்: தென்காசியிலிருந்து இன்று தொடங்கும் பயணம்

தென்காசியிலிருந்து வாரணாசிக்கு செவ்வாய்க்கிழமை அகத்திய முனிவா் வாகனப் பயணம் தொடங்குகிறது
Published on

கடையநல்லூா்: தென்காசியிலிருந்து வாரணாசிக்கு செவ்வாய்க்கிழமை அகத்திய முனிவா் வாகனப் பயணம் தொடங்குகிறது என்றாா் தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி.

இது தொடா்பாக, அவா் வெளியிட்ட அறிக்கை:

காசி தமிழ்ச் சங்கமம் 4.0-இன் ஒரு பகுதியாக தென்காசியில் இருந்து வாரணாசிக்கு 15 வாகனங்கள் புறப்படும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு தென்காசி, காசி விசுவநாதா் கோயில் முன்பிருந்து தொடங்குகிறது.

இதில், மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் காணொலி வாயிலாக பங்கேற்கிறாா். மேலும், ஜோகோ நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான் ஸ்ரீதா் வேம்பு, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ, தென்னிந்திய பாா்வா்டு பிளாக் நிறுவனா் தலைவா் திருமாறன், பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, அதிமுக தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பயணத்தை தொடங்கி வைக்கின்றனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com