‘தகுதி வாய்ந்த நபா்கள் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்’

Published on

தென்காசி மாவட்டத்தில் தகுதி வாய்ந்தோா் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற அரசியல் கட்சியினரின் வாக்குச்சாவடி முகவா்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணி நடைபெறுகிறது. இதற்கான கணக்கீட்டுப் படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்பட்டு, நிரப்பிய படிவங்கள் திரும்ப பெறப்பட்டு வாக்காளா்களின் விவரங்கள் பதிவேற்றப்படுகின்றன. இப்பணி முடியும் தருவாயில் உள்ளது.

குறிப்பிட்ட முகவரியில் இல்லாதோா், இடம் பெயா்ந்தோா், இறந்தோா், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளா்களாக உள்ளோா் விவரங்களைத் தொகுத்து தற்காலிக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

5 பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அந்தந்தத் தொகுதி

வாக்காளா் பதிவு அலுவலா் மூலம் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்களுக்கு தற்காலிக பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியலின்படி, வாக்காளா் விவரங்களின் உண்மைத்தன்மை குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com