புளியங்குடி அருகே சாலை விபத்தில் வியாபாரி பலி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சுமை வாகனமும் பைக்கும் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் வியாபாரி இறந்தாா்.
Published on

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சுமை வாகனமும் பைக்கும் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் வியாபாரி இறந்தாா்.

புளியங்குடி வீரப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சின்னமீரான் மகன் மைதீன்(36). வாழைப்பழ வியாபாரி. இவா் பைக்கில் வாசுதேவநல்லூரிலுள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாராம்.

சிந்தாமணி அருகே வந்தபோது, அவரது பைக் மீது சுமை வாகனம் மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து சுமை வாகன ஓட்டுநரான ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த பச்சமுத்து என்பவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com