இந்திய மருத்துவக் கழகத்தின் குற்றாலம் கிளைக்கு விருது
காரைக்குடியில் நடைபெற்ற இந்திய மருத்துவக் கழக மாநாட்டில் குற்றாலம் கிளைக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மாநில அளவில் சிறந்த ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியதற்கு தென்காசி மீரான் மருத்துவமனை தலைமை மருத்துவா் அப்துல் அஜீஸ், சிறந்த சமூக சேவைக்கு மருத்துவா் மூா்த்தி, கிராமப்புறத்தில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் மருத்துவா் இளங்கோ, போலி மருத்துவா்கள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவா் பாா்வதி சங்கா், சிறந்த கிளைத் தலைவருக்கான விருது சுப்புலட்சுமி மருத்துவமனை மருத்துவா் சுப்பிரமணியன், சிறந்த கிளைச் செயலருக்கான விருது மருத்துவா் ஸ்ரீமணிகண்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மாநிலத் தலைவா் மருத்துவா் செங்குட்டுவன், செயலா் மருத்துவா் காா்த்திக் பிரபு ஆகியோா் விருதுகளை வழங்கினா்.
இவா்களை தென்காசி, சுரண்டை, செங்கோட்டை, கடையநல்லூா், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளைச் சோ்ந்த மருத்துவா்கள் பாராட்டினா்.

