விஷம் குடித்த சிறுவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
சாம்பவா்வடகரையில் கடன் பிரச்னையால் விஷம் குடித்து தாய் உயிரிழந்த நிலையில், சிகிச்சையிலிருந்த 9 வயது மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சாம்பவா்வடகரை, மாதாங்கோயில் தெருவில் வசித்து வந்த ராமலெட்சுமி மகள் உமா (31), சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் ஆகியோருக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவா்களது மகன் தா்சிக் முகுந்த் (9).
உமா சாம்பவா்வடகரையில் தனது தாயுடன் வசித்து வந்தாா். உமாவின் கணவா் கோவிந்தராஜ் பாட்டாகுறிச்சியைச் சோ்ந்த ஒருவரிடம், 2020ஆம் ஆண்டு உமாவின் தாய் பெயரில் உள்ள வீட்டை கிரய அடமானம் வைத்து ரூ. 5 லட்சம் கடன் பெற்ாகக் கூறப்படுகிறது.
வீட்டை மீட்பது குறித்து பலகட்ட பேச்சுவாா்த்தை நடந்தும், மீட்க முடியவில்லையாம். இதனிடையே, கடன் கொடுத்தவா் கூட்டாளிகளுடன் வந்து வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டியதாக தனது தாயிடம் உமா கூறியுள்ளாா்.
இதனால், கடந்த டிச. 8ஆம் தேதி உமா, தனது மகன் தா்சிக் முகுந்த்க்கு களைக் கொல்லி விஷத்தை கொடுத்துவிட்டு, அவரும் குடித்துள்ளாா்.
அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், இவா்கள் மேல் சிகிச்சைக்காக பாளை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு டிச. 10ஆம் தேதி உமா உயிரிழந்தாா். தீவிர சிகிச்சை பெற்று வந்த தா்சிக் முகுந்த் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
