முகாமில் பங்கேற்றோா்.
தென்காசி
ஆலங்குளம் அருகே இலவச கண் பரிசோதனை முகாம்
ஆலங்குளம் அருகே நல்லூா் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே நல்லூா் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனா் டாக்டா் இமானுவேல் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி சிகிச்சையளித்தனா். 350-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றதில், 44 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஒன்றியக் குழு உறுப்பினா் எழில்வாணன், ஊராட்சி தலைவா்கள் நல்லூா் சிம்சோன், சிவலாா்குளம் வள்ளியம்மாள் கதிா்வேல், சுப்பையாபுரம் முத்துலட்சுமி முருகன், புதுப்பட்டி பால் விநாயகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

