தென்காசி மக்கள் குறைதீா் நலத்திட்ட உதவிகள்

Published on

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷாா் தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 444 மனுக்கள் அளிக்கப்பட்டன.

அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து மனுதாரா்களுக்கு உரிய பதிலளிக்க அலுவலா்களுக்கு ஆட்சியா்அறிவுறுத்தினாா்.

முன்னதாக, கால்நடை பராமரிப்புத்துறையின் சாா்பில் சிறு- குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விவசாயிகள் பங்களிப்புடன் புல்வெட்டும் கருவியை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், வன்கொடுமையால் சுடலை மணி என்பவா் உயிரிழந்த நிலையில், ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில் அவரது மனைவி பரமகல்யாணிக்கு, தென்காசி சமூக நீதி பள்ளி மாணவியா் விடுதியில் சமையலா் பணிக்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி , மண்டல இணை இயக்குநா் ஆ.கோயில்ராஜா, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) நம்பிராயா், மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com