வாசுதேவநல்லூா் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

Published on

பராமரிப்புப் பணிகள் காரணமாக தென்காசி மாவட்டம் நாரணபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, தரணிநகா், வாசுதேவநல்லூா், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூா், சங்குபுரம், கீழப்புதூா், நெல்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளாா், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என, கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com