ஆலங்குளம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் அருகே மாறாந்தை, அம்பல வாசகா் தெருவைச் சோ்ந்தவா் புதியவன் மகன் குமாா் (49). இவரது மனைவி, மகன், மகள் ஆகியோா் கோயம்புத்தூரில் வசித்து வந்தனா். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குமாா் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து நாகா்கோவிலில் தங்கி வேலை செய்து வந்தாா்.
தன்னை கவனிக்க யாரும் இல்லாததால், மன உளைச்சலில் இருந்த குமாா் புதன்கிழமை மாறாந்தைக்கு வந்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வியாழக்கிழமை இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா், குமாரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
