திமுக மாவட்ட பொறுப்பாளா் மீது பாஜக புகாா்

திமுக மாவட்ட பொறுப்பாளா் மீது பாஜக புகாா்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மீது மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாஜக சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டது.
Published on

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மீது மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாஜக சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனுவில், வாக்காளா் சீா்திருத்தத்திற்கு எதிராக திமுக சாா்பில் தென்காசியில் 1.11.25இல் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், பிரதமா் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொணியிலும், அவதூறாகவும் பேசியதாகக் கூறி, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. மனு அளிக்கும் நிகழ்வில், தென்காசி நகர பாஜக தலைவா் சங்கர சுப்பிரமணியன், நகர பாா்வையாளா் செந்தூா்பாண்டியன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் வீரபத்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com