தென்காசி
கடையநல்லூா் அருகே கோயில் மீது கல் வீசியவா் கைது
கடையநல்லூா் அருகே கோயில் மீது கல் வீசியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா் அட்டைக்குளம் தெருவைச் சோ்ந்தவா் சேக் உதுமான் மகன் முஹம்மது யாசின். இவா் இரண்டு நாள்களுக்கு முன் மாவடிக்கால் பகுதியில் உள்ள பிள்ளையாா் கோயில் மீது கல் வீசினாராம்.
இது குறித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முகம்மதுயாசினை கைது செய்தனா்.
