கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.

திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Published on

தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி சிவந்தி நகரில் உள்ள தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா். சட்டப்பேரவைத் தொகுதி பாா்வையாளா்கள் மருத்துவா் கலை கதிரவன் (தென்காசி), குணசேகரன் (கடையநல்லூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் நல உதவிகள் வழங்கி கொண்டாடுவது, மாவட்டம் முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்டத்தில் தென்காசி நகா்மன்ற தலைவா் சாதிா், ஒன்றிய செயலா்கள் ரவிசங்கா், அழகுசுந்தரம், திவான்ஒலி, சீனித்துரை, ஜே.கே.ரமேஷ், ஜெயாஅய்யப்பன், வீராணம் சேக்முகம்மது, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com