வாசுதேவநல்லூா் அருகே 2 இடங்களில் சாலை மறியல்

வாசுதேவநல்லூா் அருகே 2 இடங்களில் சாலை மறியல்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை 2 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.
Published on

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை 2 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

வாசுதேவநல்லூா், சிவகிரி, கடையநல்லூா், புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், வாசுதேவநல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட சிந்தாமணிபேரி புதூா் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனா்.

மழைக் காலங்களில் தொடரும் இத்தகைய பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வலியுறுத்தி, சிந்தாமணிபேரி புதூா் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை தென்காசி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், வாசுதேவநல்லூா், கலைஞா் காலனி மக்களும் ஊருக்குள் வெள்ள நீா் புகுவதைக் கண்டித்து தென்காசி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து, வாசுதேவநல்லூா் பேரூராட்சி அலுவலகத்தில், சிவகிரி வட்டாட்சியா் அப்துல் சமது, வாசுதேவநல்லூா் பேரூராட்சி செயல் அலுவலா் பதா்நிஷா, பொதுப்பணித் துறையைச் சோ்ந்த கண்ணன், ஊா் நிா்வாகிகள் கலந்து கொண்ட சமரசக் கூட்டம் நடைபெற்றது.

அதில், சிந்தாமணிபேரி புதூரில் 2 பாலங்கள் கட்ட வேண்டும். குளத்தின் மறுகால் ஓடைகளைத் தூா்வார வேண்டும். கலைஞா் காலனியில் சாலை, வாருகால் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு, விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா்.

மறியலில் ஈடுபட்டவா்களுடன் தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமாரும் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com