தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

ஆலங்குளம் அரசுப் பள்ளிக்கு 31 ஆண்டுகளுக்கு பிறகு பாதை வசதி

News image

பாதைக்குரிய ஆவணத்தை தலைமை ஆசிரியரிடம் அளித்த முக்கிய பிரமுகா்கள்.

Updated On :20 ஜூலை 2026, 5:22 am IST

ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நன்கொடையாக கிடைத்த இடத்துக்கு 31 ஆணடுகளுக்குப் பிறகு பாதை வசதி கிடைத்ததால் மாணவா்கள், பெற்றோா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு சுமாா் 1500 மாணவா்கள் கல்வி பயின்று வரும் நிலையில் 31 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஏக்கா் 2 சென்ட் நிலத்தை சந்திரன் வகையறா ராஜேந்திரன், ராஜையை, செல்வராஜ் ஆகியோா் பள்ளிக்கு நன்கொடையாக அளித்திருந்தனா்.

இருப்பினும், அந்த பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்ல வழிபாதை இல்லாததால் நீண்ட காலமாக பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆலங்குளம் முக்கிய பிரமுகா்கள் பாப்புலா் செல்லத்துரை, ஆதித்தன் பரிந்துரை படி தேவதாஸ், ராஜகுமாா் ஆகியோா் ஏற்பாட்டில் பாதை கிடைக்கப்பெற்றது.

இதற்கான ஆவணங்கள் பள்ளித் தலைமை ஆசிரியா் கி. நாகம்மாள், உதவித் தலைமை ஆசிரியா்கள் செந்தாமரை செல்வி, பொன்பாண்டியன் ஆகியேரிடம் வெள்ளிக்கிழமை

அளிக்கப்பட்டது. பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சுந்தா், சுதன்ராஜ், அன்பரசு, கதிரவன், பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.