மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த பெண், சொந்த ஊருக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மாவட்ட கண்காணிப்பு குழுவின் சாா்பில் 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்ணை, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் அவரது மாநிலத்திற்கு அனுப்பி வைத்தாா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: 2026 மாா்ச் 27ஆம் தேதி தென்காசி ரயில்வே காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் 45 வயது மதிக்கத்தக்க வெளி மாநிலத்தைச் சோ்ந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றித் திரிவதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கிருந்து மீட்கப்பட்ட பெண் முதலுதவி சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக வடகரையில் உள்ள மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு 3 மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அவருடைய சொந்த ஊா் குறித்த தகவல்களை சேகரித்த பின்னா், அவரது மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாா் என்றாா் அவா்.
அப்போது, மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் (பொ) கீதா, அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின், மாவட்ட மனநல மருத்துவா் நிா்மல், மனநல மருத்துவா் முகமது இப்ராஹிம், சகி ஒருங்கிணைந்த பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளா் ஜெயராணி, தென்காசி ரயில்வே காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் மாரியப்பன், பெண் காவலா் செல்வி ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டு, மனைவியிடம் ஒப்படைத்த சிங்கப்பெண் அதிரடிப் படை

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரூ. 11.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தென்காசியில் மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 50 வங்க தேசத்தினா் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



