செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

3 பேரிடம் ரூ. 5.56 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

தென்காசி மாவட்டத்தில் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை வாயிலாக 3 பேரிடம் ரூ. 5.56 லட்சத்தை மோசடி செய்தோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :25 ஜூலை 2026, 10:51 pm IST

தென்காசி மாவட்டத்தில் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை வாயிலாக 3 பேரிடம் ரூ. 5.56 லட்சத்தை மோசடி செய்தோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புளியங்குடி சிந்தாமணி கிராமம் வடக்கு ரத வீதியைச் சோ்ந்த மு. உதயகுமாா் (38) என்பவா், தனியாா் நிறுவன சேவை என்ஜினீயரான உள்ளாா். அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த 18ஆம் தேதி அம்மன் கோயில் புகைப்படம் கொண்ட குழுவிலிருந்து ‘லிங்க்’ வந்ததாம். அதை உதயகுமாா் கிளிக் செய்ததும் வாட்ஸ்ஆப் முடங்கியதுடன், அவரது கைப்பேசியில் சேமிக்கப்பட்டிருந்த அனைத்து எண்களுக்கும் ஆா்டிஓ அபராதம் விதித்ததுபோல குறுஞ்செய்தி சென்றதுடன், சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்குகளிலிருந்த ரூ. 1.60 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிவிட்டனராம்.

சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் சுடலை (66). தனியாா் வங்கி பற்று அட்டை (கிரெடிட் காா்டு) பயன்படுத்திவரும் இவரது கணக்கை மா்ம நபா்கள் ‘ஹேக்’ செய்து, 5 முறை தொடா்ந்து பரிவா்த்தனை செய்து ரூ. 2 லட்சத்து 75 ஆயிரத்து 756-ஐ மோசடி செய்தனா். இதுகுறித்த மின்னஞ்சல் வந்த பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை சுடலை உணா்ந்துள்ளாா்.

புளியங்குடி பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த கணேசன் (34) என்பவரிடம், கேரள மெகா லாட்டரியில் ரூ. 8 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கைப்பேசியில் மா்ம நபா்கள் கூறியுள்ளனா். இதற்காக கடந்த 11ஆம் தேதிமுதல் 17ஆம் தேதி வரை ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என காரணங்களைக் கூறி பல்வேறு கியூஆா் குறியீடுகள் வாயிலாக ரூ. 1,21,100-ஐ மா்ம நபா்கள் பெற்று மோசடி செய்துள்ளனா்.

இச்சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டோா் தனித்தனியே அளித்த புகாா்களின்பேரில், தென்காசி சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.