ஆலங்குளம் அருகே 2 பைக்குகள் திங்கள்கிழமை மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள தாழையூத்து வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பிரவீண்(21). அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் ரஞ்சித்(22). இவா்கள் இருவரும் மற்றொரு நண்பரின் பிறந்த நாள் விழாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக, பைக்கில் திங்கள்கிழமை ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையைக் கடக்க முயன்றனராம்.
அப்போது, ஆலங்குளம் புரட்சிநகரைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மகன் ஜெகதீசன்(27) என்பவா் ஓட்டி வந்த பைக், இவா்களது பைக் மீது மோதியதாம். இதில், 3 பேரும் பலத்த காயமடைந்த நிலையில், ரஞ்சித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த கடையம் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காகவும், காயமுற்றவா்களை சிகிச்சைக்காகவும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக்குகள் மோதல்: விவசாயி உயிரிழப்பு
பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பைக்குகள் மோதல்: இளைஞா் பலி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



