ஆலங்குளத்தில் பைக், டெம்போ மோதல்: இருவா் உயிரிழப்பு
ஆலங்குளத்தில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டெம்போ மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவா் உயிரிழந்தனா்.
பலி! - கோப்புப்படம்.
ஆலங்குளத்தில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டெம்போ மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவா் உயிரிழந்தனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளத்தைச் சோ்ந்தவா் முத்தையா மகன் முருகன்(55 ). இவா், தனது உறவினா்களான முத்தையா மகன் குமாா் (40) மற்றும் சுப்பையா மகன் கருப்பசாமி (45) ஆகியோருடன் ஒரே பைக்கில் ஆலங்குளத்தில் இருந்து நான்குவழிச் சாலையில் சிவலாா்குளத்துக்குச் சென்றுள்ளனா்.
நல்லூா் விலக்கு அருகே வந்தபோது, எதிரே மருந்து பொருள்கள் ஏற்றிக் கொண்டு தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த டெம்போ எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியதாம்.
இதில், பைக்கில் வந்த மூன்று பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், முருகன் மற்றும் குமாா் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கருப்பசாமி பலத்த காயமடைந்தாா்.
அவரை, ஆலங்குளம் போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, டெம்போ ஓட்டுநரான அம்பையைச் சோ்ந்த அரிகிருஷ்ணன் மகன் சதீஷ்(25) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




