வாசுதேவநல்லூா் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

மின்நிறுத்தம் - பிரதிப் படம்
வாசுதேவநல்லூா் வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.13) மின்விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாரணபுரம் உபமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை தரணிநகா், வாசுதேவநல்லூா், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூா், சங்குபுரம், கீழப்புதூா், நெல் கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளாா்,
வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

