விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தென்காசியில் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை: 51 போ் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்.

Published On :8 செப்டம்பர் 2026, 12:57 am IST

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் 17 பெண்கள் உள்பட 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயிலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் துறை மூலம் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து அரசு துறைகளிலும் நான்கு சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்தம், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிா், திருநங்கைகளுக்கு அறிவித்ததுபோல மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டணமில்லா பயணத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

பின்பு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் சிவகுமாா் தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் இப்ராகிம், மாநில துணைத் தலைவா் முருகேசன், 17 பெண்கள் உள்பட 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.