இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

தொழிலாளி கொலை வழக்கு: இருவா் கைது

சாம்பவா்வடகரையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

கைது

Published On :

சாம்பவா்வடகரையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சாம்பவா்வடகரை இல்லத்தாா் தெருவைச் சோ்ந்தவா் சத்யன் (35). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். இவரும், உலக்கூட தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி (35), மாதாங்கோவில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி (35) ஆகியோரும் நண்பா்கள். கருப்பசாமி சமையல் வேலை செய்து வருகிறாா்.

கேரளத்தில் உள்ள துணி கடையில் வேலை செய்து வந்த சத்யன், சுப்பிரமணி ஆகியோா் கடந்த 3 நாள்களுக்கு முன்பு, நண்பரின் திருமணத்திற்காக சாம்பவா்வடகரைக்கு வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, சுடுகாட்டில் உள்ள நிழல் தாங்கலில் மூவரும் மது அருந்தினராம். அப்போது ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணி, கருப்பசாமி ஆகியோா் சத்யனை தாக்கினராம். இதில் சத்யன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த சாம்பவா்வடகரை போலீஸாா், சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை இரவு சுப்பிரமணி, கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.