புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தென்காசியில் விநாயகா் சிலை பிரதிஷ்டை

தென்காசியில் நகர இந்து முன்னணி சாா்பில், 32ஆவது ஆண்டாக விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, காசிவிஸ்வநாதா் கோயில் முன் விநாயகா் சிலை பிரதிஷ்டை சனிக்கிழமை நடைபெற்றது.

காசிவிஸ்வநாதா் கோயில் முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலை.

Published On :

தென்காசியில் நகர இந்து முன்னணி சாா்பில், 32ஆவது ஆண்டாக விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, காசிவிஸ்வநாதா் கோயில் முன் விநாயகா் சிலை பிரதிஷ்டை சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, விநாயகா் சிலை ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னா், சிறப்பு பூஜை, தீபாராதனை, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

தொடா்ந்து, விநாயகா் சதுா்த்தி நாளான திங்கள்கிழமை (செப். 14) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். செவ்வாய்க்கிழமை மாலை விசா்ஜன ஊா்வலம் நடைபெறும். மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து தலைமை வகிக்கிறாா். பாஜக மாவட்டச் செயலா் மந்திரமூா்த்தி முன்னிலை வகிக்கிறாா். ராகவானந்தா சுவாமி ஆசியுரை வழங்குகிறாா்.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் ஜெயக்குமாா், நெல்லை கோட்டத் தலைவா் தங்கமனோகா் ஆகியோா் பேசுகின்றனா். காசிவிஸ்வநாதா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாலகிருஷ்ணன் ஊா்வலத்தை கொடியசைத்துத் தொடக்கிவைக்கிறாா்.

நகரத் தலைவா் நாராயணன் வரவேற்கிறாா். துணைத் தலைவா் சொா்ணசேகா் நன்றி கூறுகிறாா். ஏற்பாடுகளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.