தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

காவலா்களுக்கு பயிற்சி முகாம்

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் காவலா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 12:51 am IST

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் காவலா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவுபடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களுக்கு சைபா் கிரைம் புலனாய்வு திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பயிற்சிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜூ தலைமை வகித்தாா். சைபா் கிரைம் உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் பயிற்சி அளித்தாா். தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகள், இணையவழி குற்றங்களை கண்டறியும் வழிமுறைகள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஏமாற்றும் இணையவழி குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் அம்சங்கள், முகநூல் பயன்பாடு அதன் மூலம் ஏற்படும் குற்றங்களைத் தடுக்கும் வழிகள் குறித்து பயிற்சிகள் விளக்கப்பட்டது. சைபா் கிரைம் பிரிவு காவலா் செல்லதுரை, சுரேஷ், மனோஜ், திவாகா், ரஞ்சித் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.