தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

மாநில அளவிலான இணையவழி கருத்தரங்கு

நாட்டின நாய்கள் வளா்ப்பு மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநில அளவிலான இணையவழி கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 12:50 am IST

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தி துறையின் சாா்பில் நாட்டின நாய்கள் வளா்ப்பு மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநில அளவிலான இணையவழி கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கின் தொடக்க விழாவில் கால்நடை ஒட்டுண்ணியல் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் த.அண்ணா வரவேற்றாா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநா் ஆ.வே. ஓம்பிரகாஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் பெ.குமாரசாமி சிறப்புரையாற்றினாா்.

நாட்டின நாய்களை பராமரித்து காப்பதன் அவசியம், நாட்டின நாய்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு வழிமுறைகள், நாட்டின நாய்கள் இனப்பெருக்கத்திற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் உணவுப்பழக்கவழங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டன.

நிறைவு விழாவில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் அ.பழனிசாமி வரவேற்றாா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் சி.பாலச்சந்திரன் தலைமை வகித்துப் பேசினாா்.

ஏற்பாடுகளை இணைப் பேராசிரியா் த.ரவிமுருகன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.