திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

விரைவு ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

விரைவு ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :25 ஜூன் 2024, 6:30 pm

Din

திருத்தணி: திருத்தணி 2-ஆவது ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞா் அதிவிரைவு ரயில் மோதியதில் உயிரிழந்தாா்.

திருத்தணி ஜோதி சாமி தெருவில் உள்ள 2-ஆவது தானியங்கி ரயில்வே கேட் பகுதியில், செவ்வாய்க்கிழமை மதியம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது, ரேணிகுண்டா மாா்க்கத்தில் இருந்து திருத்தணி வழியாக சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இறந்தவா் பெயா், விலாசம் தெரியவில்லை. முதல்கட்ட விசாரணையில், இறந்தவா் ரயில் நிலையம் மற்றும் பஜாா் பகுதியில், வாட்டா் பாட்டில்கள் மற்றும் குப்பைகழிவுகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரியவந்தது. தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்தவரின் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.