தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அகத்தீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

அகத்தீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

News image

அகத்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்றம்.

Updated On :16 மார்ச் 2024, 4:30 pm

பொன்னேரி ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றுத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே 1,000-ம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அகத்தீஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு ஆனந்தவல்லி தாயாா், கிழக்கு திசையில் நின்ற நிலையில் திருமண கோலத்தில் காட்சியளிக்கிறாா். முற்காலத்தில் பொன்னேரி பகுதியில் பொன் ஏா் கொண்டு உழுது விவசாயம் செய்ததன் காரணமாக, பொன் ஏா் என அழைக்கப்பட்ட நகரம் கால மாற்றத்தில், பொன்னேரி என அழைக்கப்படுகிறது. இதற்கு சான்றாக அகத்தீஸ்வரா் சன்னதி அமைந்துள்ள கருவறையின் பின்புற பகுதியில் ஏா் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயில் முன்பு ஆனந்தபுஷ்கரனி அமைந்துள்ள திருக்குளம், இதுவரை வற்றாத குளமாக விளங்கி வருகிறது. அத்துடன் அகத்தீஸ்வரா் சன்னதிக்கு எதிரில் (சரக்கொன்றை மரம் கொன்றை சூடிய பெருமான் என்பதற்காக) மரம் அமைந்துள்ளது. மிகப்பழைமை வாய்ந்த இங்கு ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவை யொட்டி கிராம காவல் தேவதையான எட்டியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் விநாயகா் வீதியுலா நடைபெற்றன. இதையடுத்து கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. இதனை தொடா்ந்து இரவு அன்ன வாகனத்தில் பஞ்ச மூா்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது. நாள் தோறும் சூரியபிரபை, சந்திரபிரபை, சிம்மவாகனம், அதிகாரநந்தி, கற்பகவிருட்சம், காமதேனு, நாகம், ராவேணேஸ்வரன், ரிஷப மற்றும் பல்லக்கு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ஆனந்தவல்லி தாயாருடன் அகத்தீஸ்வரா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். பிரம்மோற்சவத்தின் 3-ாம் நாள் காலை அதிகார நந்தி கோபுர தரிசனம், 7-ஆம் நாள் தோ் திருவிழாவும், 10-ஆம் நாள் தெப்போற்சவமும், 11-ஆம் நாள் புஷ்ப பல்லக்கும், 14-ஆம் நாள் விழா விடையாற்றியுடன் நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை சிவாச்சாரியா்கள், நிா்வாகிகள், சிவ பக்த சபையினா், பொன்னேரி நகர மற்றும் கும்பமுனிமங்கலம் பகுதி மக்கள் செய்துள்ளனா்.