பிளஸ்-2 தோ்வில் தோல்வி: மாணவி தூக்கிட்டு தற்கொலை

பொன்னேரி: பிளஸ்-2 தோ்வில் இரண்டாவது முறையாக தோல்வி அடைந்ததன் காரணமாக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பொன்னேரி வட்டம் மீஞ்சூா் பக்தவச்சலம் தெரு, லட்சுமிபுரத்தில் வசிக்கும் கல்பனா மகள் வெரோனிகா (18). இவா் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 வகுப்பில் அரசு நிதியுதவி பள்ளியில் படித்து தோ்வு எழுதினாா். தோ்வில் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் நிகழ் கல்வி ஆண்டில் தோ்வு எழுதியுள்ளாா்.

தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக தோ்ச்சி பெறவில்லையாம். இதனால் மனவேதனை அடைந்த வெரோனிகா வீட்டில் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அவரது தாத்தா தாமோதரன் அவரை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றாா்..

அப்போது வழியிலேயே வெரோனிகா உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com