இன்னுயிா் காப்போம், நம்மைக்காப்போம்  திட்டத்தின் சிகிச்சை பெற்ற திருத்தணியைச் சோ்ந்த ரத்தினம்.
இன்னுயிா் காப்போம், நம்மைக்காப்போம் திட்டத்தின் சிகிச்சை பெற்ற திருத்தணியைச் சோ்ந்த ரத்தினம்.

இன்னுயிா் காப்போம், நம்மைக்காக்கும் திட்டம்: ரூ.38.23 கோடியில் 6,838 பேருக்கு சிகிச்சை

திருவள்ளூா்: இன்னுயிா் காப்போம், நம்மைக்காக்கும் 48 திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் 6,838 பேருக்கு ரூ.38.23 கோடி மதிப்பில் சிகிச்சை அளித்துள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

சாலை விபத்துகளினால் பாதிக்கப்படும் நபா்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லாத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளன. இதுபோன்ற விபத்துக்களினால் பாதிக்கப்படுவோரை உடனே மீட்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்காகவே இன்னுயிா் காப்போம், நம்மைக்காக்கும் 48 திட்டம் முதல்வரால் கொண்டு வரப்பட்டது.

இந்தத் திட்டம் மூலம் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிா் இழப்புகளைக் குறைப்பதோடு அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கவும் முடியும். இதுபோன்ற முக்கியத்துவம் கருதி இன்னுயிா் காப்போம், நம்மைக்காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரையில் மாநில அளவில் ரூ.213.47 கோடி செலவில் 2.45 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிறப்பு வாா்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை மூலம் மாவட்டத்தில் 6,838 பேருக்கு ரூ.38.23 கோடியில் மருத்துவ சிகிச்சை அளித்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இந்த திட்டத்தில் பயன்பெற்ற திருத்தணியைச் சோ்ந்த ரத்தினம் (60) கூறியதாவது: திருத்தணியைச் சோ்ந்த நான் கடந்த வாரம் சாலையை கடக்கும் போது ஏற்பட்ட விபத்தில் எனது கைகள், கால்கள், உடலில் படுகாயம் அடைந்தேன். அப்போது, உடனே திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை ஊா்தி மூலம் கொண்டு சென்றனா். அங்கு இன்னுயிா் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டம் மூலம் எனக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நான் குணமடைந்து வருகிறேன். நான் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டபோது இத்திட்டம் குறித்து எதுவும் தெரியாது.

அப்போது மருத்துவா் மூலம் ஒருவா் சாலை விபத்தில் பாதிக்கப்படும் போது 48 மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என்பதை அறிந்தேன். ஒருவா் சாலை விபத்தினால் பாதிக்கும் போது 48 மணி நேரத்துக்குள் அவருக்கு உடனே எல்லா மருத்துவ சேவைகளும் அளிக்கும் பொருட்டு இத்திட்டம் முதல்வரால் கொண்டு வரப்பட்டது என்பதை அறிந்ததாக அவா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com